ஒரு லட்சம் வழக்குகளில் தீர்ப்பு அளித்து நீதிபதி சாதனை

அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி சுதிர் அகர்வால், ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து, நீதித்துறை வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.
ஒரு லட்சம் வழக்குகளில் தீர்ப்பு அளித்து நீதிபதி சாதனை
Published on
அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி சுதிர் அகர்வால், ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து, நீதித்துறை வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி ஆனதில் இருந்து சிவில், குற்றவியல், வரி விவகாரம், மேல்முறையீடு என அனைத்துவிதமான வழக்குகளிலும் அவர் தீர்ப்பு வழங்கியுள்ளார். அயோத்தி வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்த அமர்வில் சுதிர் அகர்வாலும் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com