லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்த அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்த அகிலேஷ் யாதவ்
Published on

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உண்மை பகிரப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனிடையே, லக்கிம்பூர் சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com