Ajith Kumar Race | Narain Karthikeyan | AK உடன் இணையும் NK - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே
ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்க தயாராகும் நடிகர் அஜிர் குமாரின் ரேசிங் அணியில் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனும் இணைந்துள்ளார். இந்தாண்டு நடைபெறும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் (Asian Le Mans Series) பங்கெடுக்க அஜித்குமாரின் கார் ரேஸ் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. இதில் LMP2, LMP3, GT வகுப்புகளில் அஜித் கார் ரேஸ் நிறுவனம் உட்பட பல்வேறு அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், ஆசிய லீ மான்ஸ் தொடர்பான பயிற்சி ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்றது. அதில் அஜித்குமார், நரேன் கார்த்திகேயன், ஜூலியன் ஜெர்பி, ரோமேன் வோஸ்னியாக் ஆகியோர் பங்கேற்ற வீடியோ வெளியாகி உள்ளது.
Next Story
