"கீழே இறக்கி விடுங்கள்" - நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானத்திற்குள் பரபரப்பு | Air India Flight

x

மும்பையிலிருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏ.சி. பழுதானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். மும்பையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதமானது. விமானத்திற்குள் ஏ.சி. செயல்படாததால் வெப்பம் அதிகரித்து பயணிகள் புழுக்கத்தால் அவதியுற்றனர். இதனைத்தொடர்ந்து கேபின் மற்றும் கதவுகளை தட்டி, ஏர் லாக் செய்யப்பட்ட கதவை திறக்குமாறும், தங்களை கீழே இறக்குமாறும் கூச்சலிட்டனர். பின்னர் லாக் செய்யப்பட்ட கதவு திறக்கப்பட்டு கீழே இறங்க விரும்பிய பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்