டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த வேண்டும் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த air purifier என்று அழைக்கக்கூடிய காற்று சுத்திகரிப்பான் நிறுவ, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த வேண்டும் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Published on

காற்று மாசு விவகாரத்தில், வாகன கட்டுப்பாடு திட்டத்தை விதித்த டெல்லி அரசின் நடவடிக்கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு , நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகன கட்டுப்பாடு திட்டத்தால் பலன் ஏற்பட்டுள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, பலன் ஏற்படவில்லை என்று மத்திய

மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்த நிலையில், காற்றின் தரம், 5 முதல் 15 சதவீதம் மேம்பட்டுள்ளதாக, டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நகரம் முழுவதும், மாசுவை கட்டுப்படுத்த, காற்று சுத்திகரிப்பான் நிறுவும் திட்டத்தை கொண்டுவர, மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com