Air India Plane Crash | விமான விபத்துக்கு பின்.. முதல்முறையாக இன்று டெல்லியில்..
அகமதாபாத் விமான விபத்து - உயர்நிலைக் குழு இன்று கூடுகிறது
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரிக்க அரசு அமைத்துள்ள உயர்நிலைக் குழுவின் முதல் கூட்டம், டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த விமான விபத்தில் பயணிகள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டிஎன்ஏ பரிசோதனைக்குப் பிறகு அவர்களின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. டிஎன்ஏ பரிசோதனை மூலம் இதுவரை 80 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 33 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விபத்து குறித்து ஆராய, மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை நிபுணர் குழு, முதல் முறையாக இன்று டெல்லியில் கூடுகிறது.
இந்தக் குழு, எதிர்காலத்தில் விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
