Air India || `11A' சீட்டில் உயிர்பிழைத்தது ஒருவர் இல்ல இரண்டு பேர்.. நடந்தது நம்ப முடியாத பேரதிசயம்

x

அகமதாபாத் விமான விபத்தில் உயிர்பிழைத்தவரைப் போன்று, 27 ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்து பாடகரை11 A இருக்கை காப்பாற்றியது தெரியவந்துள்ளது. அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பயணித்த 242 பேரில், 241 பேரும் உயிரிழந்த நிலையில், ரமேஷ் விஷ்வாஸ் குமார் என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். அவர் பயணம் செய்த இருக்கை எண் 11A என்பது தெரியவந்ததை தொடர்ந்து, அந்த இருக்கைக்கு பெரும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த செய்தியை பார்த்ததும் தாய்லாந்து நாட்டை சேர்ந்த பாடகரும், நடிகருமான ருவாங்சாக் ஜேம்ஸ், கடந்த 1998ம் ஆண்டு தாய் ஏர்வேஸ் விமானம் விபத்துக்குள்ளானபோது, 132 பயணிகளில் 115 பேர் கொல்லப்பட்டதாகவும், ரமேஷ் விஷ்வாஸ் குமாரை போலவே, தானும் 11A என்ற இருக்கையில் பயணம் செய்து உயிர்பிழைத்ததாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, விமான விபத்துகளில் மனித உயிர்களை காப்பாற்றும் அதிர்ஷ்ட எண்ணாக 11A மாறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்