Air India | இந்தியாவையே உலுக்கிய அந்த விபத்து - ஏர் இந்தியாவின் அடுத்த 'மாஸ்டர் பிளான்'

x

ஏர் இந்தியா நிர்வாகம் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. கடந்த ஆண்டு நிகழ்ந்த விமான விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில், ஏர் இந்தியா கடும் சர்ச்சைக்குள்ளானது... இந்த சூழலில் சி இ ஓ கேம்ப்பெல் வில்சனின் பதவிக்காலம் 2027 வரை உள்ளபோதிலும் விரைவில் புதிய சி இ ஓ நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட 2 முன்னணி சர்வதேச விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஏர் இந்தியாவின் தலைவர் சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்