துடிக்க துடிக்க இறந்த ஏர் ஹோஸ்டஸ் - கொடூரன் சொன்ன காரணம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மும்பையில் விமான பணிப்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட துப்புரவு பணியாளரை 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை, அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ரூபால் ஓக்ரே. 24 வயது இளம் பெண்ணான இவர், விமான பணிப்பெண்ணாக பயிற்சி பெற்று வந்த நிலையில், வீட்டினுள் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், குடியிருப்பில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்த அத்வால் என்பவரே பெண்ணை கழுத்தறுத்து கொன்றது தெரியவந்தது. தனது அறையை சரியாக சுத்தம் செய்யாததால், பணியாளரை ரூபால் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அத்வால், பெண்ணை கழுத்தறுத்து கொன்றது தெரியவர, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், துப்புரவு பணியாளரான அத்வாலை 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.துடிக்க துடிக்க இறந்த ஏர் ஹோஸ்டஸ் - கொடூரன் சொன்ன காரணம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com