AI Videos Rules | ``இனி இது கட்டாயம்.. 3 மணி நேரத்துல நீக்கணும்’’-நாடு முழுவதும் புதிய விதிகள் அமல்
``இனி இது கட்டாயம்.. 3 மணி நேரத்துல நீக்கணும்’’ - நாடு முழுவதும் புதிய விதிகள் அமல் ஏஐ வீடியோக்களுக்கு புதிய விதிமுறைகளை விதித்து மத்திய அரசு நடவடிக்கை சமீபமாக ஏஐ புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், இதன் உண்மைத் தன்மை குறித்த சந்தேகங்கள் அதிகரித்து வருவதால், இதனை தடுக்க மத்திய அரசு புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.. அதன்படி இனி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதள பக்கங்களில் ஏஐ கொண்டு வீடியோ அல்லது புகைப்படம் பயன்படுத்தப்பட்டால் அதனை குறிப்பிட வேண்டும் என்றும் அதற்கான லேபிள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அரசு அல்லது நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டால், அதுபோன்ற ஏஐ வீடியோக்கள் அல்லது புகைப்படத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் மூன்று மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும் சட்டவிரோதமாக பயன்படுத்தும் ஏஐ வீடியோக்களை தடுக்க ஆட்டோமேட்டிக் கருவிகளை சமூக வலைத்தள நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இந்த புதிய விதிமுறைகள் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.
