AI Summit | "உண்மையான தாக்கத்தைக் காட்டும் மேப்" - உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி சொன்ன சேதி

"உண்மையான தாக்கத்தைக் காட்டும் மேப்"

"உண்மையான தாக்கத்தைக் காட்டும் மேப்" - உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி சொன்ன சேதி டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, AIக்கான நடத்தை நெறிமுறை மற்றும் விதிமுறைகளின் கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.. AIன் உண்மையான தாக்கத்தைக் காட்டும் ஒரு வரைபடத்தை நாம் ஒன்றாக உருவாக்குவது மிகவும் முக்கியம் எனவும், கொரோனா உள்ளிட்ட உலகளாவிய தொற்றுநோய்களின் போது, ​​நாம் ஒருவருக்கொருவர் இணைந்து நின்றதால் ​​சாத்தியமற்றது கூட சாத்தியமானது என்பதை உலகம் கண்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.. செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் திறனை புதிய உயரத்திற்கு உயர்த்தும் எனவும் டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதில் UPI முக்கிய பங்கு வகித்துள்ளது என்றும் தெரிவித்தார்... AI பயிற்சிக்கான தெளிவான தரவு கட்டமைப்பை உருவாக்கி... அவற்றின் பாதுகாப்பு விதிகளை தெளிவாகவும் வெளிப்படையாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட பிரதமர், AI தொழில்நுட்பம் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்... அது ஒவ்வொரு நாட்டின் இலக்காகவும் இருக்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com