AI மூலம் விபத்து போல் சித்தரித்து போலி வீடியோ

x

கேரள மாநிலம் வயநாட்டில் செயல்படும் ஜிப் லைனில் விபத்து ஏற்பட்டது போல் போலியாக ஏ.ஐ மூலம் சித்திரித்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் விபத்து ஏற்படுவது சிசிடிவி காட்சி போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. நடக்காத விபத்தை உண்மை போல் ஏ.ஐ மூலம் சித்திரித்து பரப்பியதால் வயநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயநாடு நிலச்சரிவிற்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் இது போன்ற போலி தகவல்கள் சுற்றுலா துறையை பாதிக்கும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்