

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மலையாள படம் 'வரேனே அவசியமுண்டு'. இந்த படத்தில் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் வரும் நாய்க்குட்டி கதாபாத்திரத்திற்கு பிரபா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயர் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் பிரபாகரன் பெயரை குறிப்பிட்டு இழிவு படுத்தும் வகையில் பெயரிடப்பட்டதாகக்கூறி பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் இது குறித்து ட்விட்டர் வெளியிட்டுள்ள துல்கர் சல்மான், என்னையும் இப்படத்தின் இயக்குநரான அனுப்பையும் விமர்சிப்பதற்கு உரிமை உள்ளது எனவும் ஆனால் என் தந்தையை பற்றி பேசுவது தவறு எனத் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட நபரை இழிவு படுத்தும் வகையில் பெயர் இடம் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'பட்டணத்தில் பிரவேஷம்' என்ற பழைய மலையாள படத்தில் வரும் பெயரையே இப்படத்திற்கு பயன்படுத்தியுள்ளதாகவும் துல்கர் சல்மான் குறிப்பிட்டுள்ளார்.