Kerala || African swine fever || கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி

x

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் பண்ணையில் இருந்த 34 பன்றிகள் அதிகாரிகளால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டன. காலடி மலையாற்றூர் - நீலீஸ்வரம் பஞ்சாயத்தில் உள்ள பாண்டியன்சிராவில் உள்ள பன்றிகளுக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில், பண்ணையை சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர் பகுதியை நோய் தொற்றுள்ள பகுதியாகவும், 10 கி.மீ. சுற்றளவை நோய் கண்காணிப்பு மணடலமாகவும் மாவட்ட ஆட்சியர் அறிவிக்க உத்தரவிட்டார். இறைச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, 2 மாதங்களில் பாதிக்கப்பட்ட பன்றி பண்ணைகளில் இருந்து பிற பன்றி பண்ணைகளுக்கு ஏதேனும் பன்றிகள் கொண்டு செல்லப்பட்டதா? என்பன குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்