ஜனநாயக கடமையாற்றிய "அம்பாசமுத்திரம் அம்பானி" பட நடிகை

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் நடிகையுமான நவ்நித் ராணா தனது வாக்கைப் பதிவு செய்தார்... தமிழில் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாசுக்கு ஜோடியாகவும் நடித்தவர் நவ்நித் ராணா... இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்... இவர் தற்போது பாஜக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள நிலையில், தனது கணவர் ரவி ராணாவுடன் அமராவதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்... அவருடன் வாக்குச் சாவடி அலுவலர்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com