``நடிகர் சுரேஷ் கோபியை காணவில்லை’’ - கேரளாவை அதிரவிட்ட கம்ப்ளைன்ட்

x

நடிகரும், எம்.பியுமான சுரேஷ் கோபியை காணவில்லை என புகார்

நடிகரும் கேரள மாநிலம் திருச்சூர் எம்.பியுமான சுரேஷ் கோபியை காணவில்லை என கொடுக்கப்பட்டுள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கோகுல் குருவாயூர், போலீசில் அளித்த புகாரில், சத்தீஸ்கரில் மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதிலிருந்து சுரேஷ் கோபியை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக சுரேஷ் கோபி தொகுதி சார்பான எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை என்றும், வருவாய்த் துறை அமைச்சரால் கூட அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. திருச்சூர் மேயரும் அமைச்சருமான கே. ராஜன் ஒரு மத்திய அரசின் திட்டத்தைத் தொடங்கி வைக்க சுரேஷ் கோபியை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்