திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஜய் பி. நாயர் என்பவர் தனது யூ டியூப் சேனலில் பெண்ணியம் பேசும் பெண்கள் குறித்து ஆபாசக் கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பின்னணி குரல் கலைஞர் பாக்கியலட்சுமி உள்பட மூன்று பெண்கள், விஜய் அலுவலகத்திற்கு சென்று அவரை கடுமையாக தாக்கி மன்னிப்பு கேட்க வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பெண்களின் துணிச்சலை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா பாராட்டியுள்ளார். அதேநேரம், தாக்குதல் நடத்திய மூன்று பெண்கள் மீது தம்பானூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.