ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு : அருண்ஜெட்லி வரவேற்பு

ஆதார் வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு : அருண்ஜெட்லி வரவேற்பு
Published on

ஆதார் வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதார் வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை, உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது என்றார். ஆதார் திட்டத்தை காங்கிரஸ் கட்சி தான் அறிமுகம் செய்தது என்று கூறிய அவர், ஆனால், அக்கட்சிக்கு, அதுபற்றி எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டார். தேசிய டிஜிட்டல் தொலைத்தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, அருண்ஜெட்லி தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com