சமூக வலைதளங்கள் உடன் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கு : வழக்கு விசாரணை ஜனவரி இறுதி வாரத்துக்கு ஒத்திவைப்பு

சமூக வலைதளங்கள் உடன் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கு அனைத்தையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஜனவரி இறுதி வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
சமூக வலைதளங்கள் உடன் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கு : வழக்கு விசாரணை ஜனவரி இறுதி வாரத்துக்கு ஒத்திவைப்பு
Published on
சமூக வலைதளங்கள் உடன் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கு அனைத்தையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஜனவரி இறுதி வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற அனுமதி அளித்தும் உத்தரவிட்டு உள்ளனர். அதே நேரத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ஏற்றுக் கொண்டு மத்திய அரசுக்கு கூடுதலாக 3 மாத கால அவகாசம் வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com