"ஆந்திராவில் மதம் மாறி காதல் திருமணம் செய்த புதுப்பெண் கொலை..? கணவர் சொன்ன அதிர்ச்சி தகவல்
மதம் மாறி காதல் திருமணம் செய்த மூன்று மாதத்தில் புதுப்பெண்ணை அவரது பெற்றோர் கொலை செய்துவிட்டதாக அவரது கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்த யாஸ்மின்பானு, பூதலப்பட்டு பகுதியை சேர்ந்த சாய்தேஜ் ஆகிய இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து, யாஸ்மின்பானுவின் பெற்றோர் அவரிடம் செல்போனில் அடிக்கடி அன்பாக பேசி வந்த நிலையில், பெற்றோரின் உடல்நலம் சரி இல்லாததால் அவர்களைப் பார்க்க யாஸ்மின்பானு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், யாஸ்மின்பானு உயிரிழந்த விட்டதாக கணவருக்கு அவரது பெற்றோர் தகவல் தெரிவித்த நிலையில், மனைவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Next Story
