மும்பை அடுத்த கோரேகாவ்-ல் குடியிருப்பு வளாகத்தில் காவலாளி மீது பாய்ந்து குதறிய தெரு நாய்

x

மும்பையை அடுத்த மேற்கு கோர்காவுன் பகுதியில் சித்தார்த் நகரில் இருக்கும் ஆதர்ஷ் வித்யாலயா என்ற பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு வளாகத்தில் காவலாளியாக பணியாற்றி வரும் நபர் அந்த வழியாக நடந்து செல்லும் போது அங்கே அமர்ந்திருந்த திருநாகை ஒன்று அவர் தோள் மீது பாய்ந்து பின்னர் அவரை கடித்து குதறியது.

இதில் அந்த காவலாளின் உடலில் நாயின் பல் பதிந்து சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்ட நிலையில் மற்றொரு காவலாளி கட்டையை வைத்து தெரு நாயை அடித்து விரட்டினார்.

அப்பகுதியில் குழந்தைகள் பெண்கள் மாணவர்கள் என 10 பேர் வரை தெருநாய்கள் இதற்கு முன்பு கிடைத்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பகுதியில் தொடர்ந்து காணப்படும் தெரு நாய்கள் நடமாட்டம் குழந்தைகள் மற்றும் பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்