ஒரே கற்பாறை.. 108 அடி பிரம்மாண்ட சிலை - பெங்களூருவில் பிரதிஷ்டை..
திருவண்ணாமலை மாவட்டம், கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கற்பாறை, கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் 108 அடி உயர சுவாமி சிலையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்ட இந்த கற்பாறை, 2017-ஆம் ஆண்டு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டு, தற்போது சிலை வடிவில் காட்சியளிக்கிறது. கர்நாடகா நமக்கு காவிரி நீரைத் தருவது போல, நாம் அவர்களுக்கு கோயில் கற்களை வழங்கியுள்ளோம் என வந்தவாசி பகுதி மக்கள் பெருமிதம் கொள்கின்றனர். அந்த சிலையின் ஒரு பகுதியில், தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட விவரத்துடன் ஒரு கல்வெட்டு அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
