"யூடியூபில் ஊருக்கு உபதேசம் - இரவில் சீரியல் கொள்ளையன்"
"யூடியூபில் ஊருக்கு உபதேசம் - இரவில் சீரியல் கொள்ளையன்"
ஒடிசாவில் ஒழுக்கமாக வாழ்வது குறித்து யூடியூபில் ஊருக்கு உபதேசம் செய்து வந்த நபர், இரவில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சீரியல் கொள்ளையன் என்பது தெரிய வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்தகிரி பாரியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக யூடியூபர் மனோஜ் சிங்கை பரத்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 200 கிராம் தங்கம், ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சிங் புவனேஸ்வர் , வெவ்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள 10 வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
