2 கார்களுக்கு நடுவே சிக்கி நசுங்கிய ஸ்கூட்டர்.. நொறுங்கிய கார்.. திக்.. திக்.. காட்சி
இரு கார்களுக்கு நடுவே சிக்கிய ஸ்கூட்டர்- நூலிழையில் தப்பிய நபர்
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பின்னால் வந்த கார் ஸ்கூட்டரில் மோதியதில், இரு கார்களுக்கு நடுவே சிக்கிய நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. சாலையின் நடுவே குழியிருந்ததால் முன்னால் சென்ற கார் மெதுவாக சென்ற நிலையில், பின்னால் ஸ்கூட்டரில் வந்தவர் தனது ஸ்கூட்டரை நிறுத்தி உள்ளார். இந்நிலையில் ஸ்கூட்டருக்கு பின்னால் வந்த கார் இடித்ததில், இரண்டு கார்களுக்கும் மத்தியில் ஸ்கூட்டரில் வந்த நபர் சிக்கி கீழே விழுந்தார். ஆனால் கீழே விழுந்தவர் அதிஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார்.
Next Story
