Maharashtra | வேலை செய்யும்போதே தூய்மைப் பணியாளர் திடீர் மரணம் - மகாராஷ்டிராவை நடுங்க வைத்த CCTV

x

மகாராஷ்டிராவில் குடியிருப்பு பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண், திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது.

பிப்ரி சிஞ்ச்வாடி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் 46 வயது மதிக்கத்தக்க பெண் தூய்மைப் பணியாளர், தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு குடியிருப்பின் தரைதளத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில், மூடி திறந்து கிடந்துள்ளது. இதனை சரியாக கவனிக்காமல் அப்பெண் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். போலீஸ் விசாரணையில் உயிரிழந்த பெண் ஆஷ்பாய் தோனே என்பதும் அவர் ஸ்பெளண்டர் பார்க் சொசைட்டி பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்