தாறுமாறாக ஓடிய கார் மோதி 12 பேர் படுகாயம்

x

ராஜஸ்தான் மாநிலம் பரண் மாவட்டத்தில், சாலையில் தாறுமாறாக ஓடிய கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரண் மாவட்டம், மேல்கேடி பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு தாறுமாறாக ஓடிய கார், சாலையில் இருந்த மாடு மீது மோதி, பறந்து சென்று விபத்துக்குள்ளானதில், 12 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் அக்காரின் ஓட்டுநர் தப்பிசென்றார். விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்