வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தண்டவாளம்.. ஸ்பாட்டில் இறங்கிய அதிகாரிகள்

x

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தண்டவாளம் - சீரமைப்பு பணி

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பு ஏற்பட்டு வெள்ளம் ஏற்பட்ட சூழலில், ரயில்வே மேம்பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து பாதிப்பு ஏற்பட்ட சக் ரக்வாலா (Chak Rakhwala) மற்றும் உதம்பூர் (Udhampur) ஆகிய பகுதிகளுக்கு இடையேயான ரயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், உதம்பூர் - கத்ரா ரயில் நிலையம் இடையேயான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அதேநேரத்தில், தண்டவாளம் அடித்து செல்லப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்