கோவையில் இச்சைக்கு இணங்க மறுத்த வடமாநில இளைஞர் கல்லால் அடித்து கொலை
ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் வடமாநில இளைஞர் கல்லால் அடித்துக் கொலை
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே அரசூர் வெள்ளானைப்பட்டி சாலை பகுதியில் ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் வடமாநில இளைஞர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபன் அன்சாரி என்பது தெரியவந்தது. விசாரணையில், கடந்த ஆறாம் தேதி இரவு அரசூர் டாஸ்மாக் கடையில் இருவரும் மது அருந்திய நிலையில், தம்முடன் ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் அவரை கல்லால் அடித்துக் கொலை செய்ததாக பீகாரைச் சேர்ந்த முகமது முக்தர் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story