புதுமணத் தம்பதி ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை - பரபரப்பு

x

புதுமணத் தம்பதி ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை - பரபரப்பு

ரயிலில் ஏற்பட்ட சண்டையை தொடர்ந்து புதுமணத் தம்பதி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுமணத் தம்பதி ரயிலில் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்திலுள்ள ராவு பள்ளி கிராமத்தை சேர்ந்த கொரடா சிங்காசலம் , அதே பகுதியை சேர்ந்த அங்கவரம் கிராமத்தை சேர்ந்த பவானி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்ற போது இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். ரயில் பயணத்தின் போது புதுமணத் தம்பதிக்கு இடையை ஏதோ காரணத்தால் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது வங்கலப்பள்ளி ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது இருவரும் கீழே குதித்து உயிரிழந்தனர். குடும்ப பிரச்சினை, பொருளாதார சூழல் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது காதல் திருமணம் தொடர்பான குடும்ப ரீதியிலான கருத்து வேறுபாடுகளை வைத்து யாராவது ரயிலில் இருந்து தள்ளி விட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்