டோல்கேட் ஊழியர்களை சரமாரியாக தாக்கிய கும்பல்... பரபரப்பு காட்சிகள்
கேரளாவில் டோல்கேட் ஊழியர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூரில் இருந்து மாகி பகுதி நோக்கி செல்லும் புறவழிச் சாலையில் டோல்கேட் அமைந்துள்ளது. அங்கு பணியில் இருந்த ஊழியர், அவ்வழியாக வந்த வாகனத்திற்கு கட்டணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் தராமல் அங்கிருந்து செல்ல வாகனத்தில் முயன்றதால் அவர் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல், அந்த ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளது.
காயமடைந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.
Next Story
