Jammu and Kashmir | Heavy Snow Fall | காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவு - 7 பேர் பலி
Heavy Snow Fall | காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவு - 7 பேர் பலி
Jammu and Kashmir | Heavy Snow Fall | காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவு - 7 பேர் பலி #jammukashmir #heavysnowfall #thanthitv ஜம்மு-காஷ்மீரின் சோஜிலா கணவாய் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் இருந்து கார்கில் நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனங்கள், 11,575 அடி உயரத்தில் உள்ள சோஜிலா கணவாய் பகுதியில் சென்றபோது 'ஜிரோ பாயிண்ட்' அருகே கண்ணிமைக்கும் நேரத்தில் மலை உச்சியிலிருந்து பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன. இந்த பனிச்சரிவில் சிக்கி, சாலையில் சென்றுகொண்டிருந்த கார்கள் மற்றும் வேன்கள் பனிக்குள் புதைந்து போயின. இந்த கோர விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பனிக்குவியலுக்குள் சிக்கி இருப்பதாக அஞ்சப்படுகிறது
