கங்கையாற்றில் மிதந்து வந்த பிரம்மாண்ட கல் | கூட்டம் கூட்டமாக திரளும் மக்கள்
கங்கையாற்றில் மிதந்து வந்த பிரம்மாண்ட கல் - மக்கள் வழிபாடு
உத்தரப்பிரதேசத்தில், கங்கையாற்றில் மிதந்து வந்த பிரம்மாண்ட கல்லை, ராமர் பாலத்தின் ஒரு பகுதியாகக் கருதி பக்தர்கள் வழிபட்டனர்.
காசிப்பூர், தாத்ரி காட் பகுதியில் கங்கை ஆற்றில் மூழ்காமல் மிதந்தபடி இருந்த பிரம்மாண்ட கல்லை பார்த்த பொதுமக்கள், இது கடவுளின் அதிசயம் என கருதி, கல்லை ஆற்றில் இருந்து வெளியே எடுத்து வந்து, அனுமனின் உருவம் பொறிக்கப்பட்ட துணியை சுற்றி வழிபட்டனர்.
இரண்டு குவிண்டால் எடையுள்ள இந்த அதிசய கல்லை காண பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வருகின்றனர்.
Next Story
