தாய் கண்முன்னே லாரி ஏறி நசுங்கி உயிரிழந்த கொடூரம் - அதிர்ச்சியளிக்கும் வீடியோ
தாய் கண்முன்னே 1ம் வகுப்பு மாணவன் விபத்தில் பலி தெலுங்கானாவில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற ஒன்றாம் வகுப்பு மாணவன், விபத்தில் சிக்கி உயிரிழந்தான். டிப்பர் லாரி சக்கரம் ஏறி பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்லம்பேட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தின் மீது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி உரசி சென்றதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் லாரி ஏறியதில் ஒன்றாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
Next Story
