தெருநாய் கடித்ததில் நான்கரை வயது சிறுவன் படுகாயம்

x

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கூத்து பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் மோபின். இவரது நான்கரை வயது மகன் எப்ரின் தனது வீட்டு வளாகத்திற்குள் தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டு வளாகத்திற்குள் புகுந்த தெரு நாய் ஒன்று எஃப் பிரனை சரமாரியாக கடித்து தாக்கியது. இதனால் எஃப்ரின் அலறி துடிக்கவே, குடும்பத்தினர் ஓடிச்சென்று நாயிடமிருந்து சிறுவனை மீட்டனர். அத்துடன் தெரு நாயை அங்கிருந்து துரத்தி அடித்தனர். இதனால் தெரு நாயின் தாக்குதலில் இருந்து சிறுவன் தப்பித்தான். காயமடைந்த சிறுவன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்