தலைக்கேறிய சரக்கு போதை.. நடுரோட்டில் இறங்கி அட்டூழியம் செய்த தந்தை, மகன்
கேரளாவில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட தந்தை மகனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் வயநாடு அருகே நம்பிக்கொல்லியில் தந்தையும், மகனும் சேர்ந்து மதுபோதையில் சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து தகராறில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரையும் பிடிக்க முயற்சித்த போது, ரகளை செய்த நிலையில் போலீஸ் ஜீப் உள்ளிட்ட 5 வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதில் காவலர் ஒருவரின் கை விரலில் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரையும் மடக்கிப் பிடித்த போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
