25 வருசத்துக்கு முன் குப்பைத் தொட்டியில் எடுத்த குழந்தை - இன்று சல்யூட் அடிக்க வைத்த வெற்றி!
மகாராஷ்டிராவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலைய குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தையாக மீட்கப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளி பெண், MPSC எனப்படும் அரசு பணி போட்டித்தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட மாலா பாபல்கருக்கு சிறு வயது முதலே பார்வை திறன் இல்லாத நிலையில், ஆசிரமத்தில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில், MPSC தேர்வில் வெற்றிபெற்றுள்ள மாலா பாபல்கர், நாக்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு தேர்வாகி இருப்பது, தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக மாலா பாபல்கர் தெரிவித்துள்ளார்.
Next Story