வீட்டில் காக்கா கட்டிய கூடு உடைந்ததால் பொழிந்த `தங்கம்’ இதுவரை நடக்காத வினோத சம்பவம்

x

காகம் தூக்கிச் சென்ற தங்க வளையல், உரிமையாளரிடம் ஒப்படைப்பு

கேரள மாநிலம் மலப்புரம் அருகே காகம் தூக்கிச் சென்ற தங்க வளையல், மூன்றரை ஆண்டுகளுக்கு பின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சேரியில் உள்ள திருக்கலங்ககோட்டை பகுதியை சேர்ந்தவர் அன்வர் சதாத். இவரது வீட்டின் மரத்தில் கட்டப்பட்டிருந்த காக்கை கூடு கீழே விழுந்த போது, அதில் தங்கள வளையல் ஒன்று, மூன்று துண்டுகளாக கிடந்துள்ளது. இது குறித்து உள்ளுர் நூலக பலகையில் அறிவிப்பு ஒட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அதே ஊரை சேர்ந்த ஹிரிதா என்ற பெண், தன் வளையலை மூன்று ஆண்டுகளுக்கு முன் காகம் தூக்கிச் சென்றதாகவும், அந்த வளையலுக்கான பில் மற்றும் புகைப்படத்தையும் அன்வர் சதாத்திடம் காட்டியுள்ளார். இதையடுத்து, தங்க வளையல் அவரிடமே ஒப்படைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்