இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை முட்டி தள்ளிய மாடு
ராஜஸ்தான் மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மாடு ஒன்று முட்டி தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் அருகே டோபி டோரா பகுதியில், பைக்கில் சென்று கொண்டிருந்த இருவரை தெருவில் இருந்த மாடு ஒன்று முட்டி தாக்கியது. மாட்டிடம் இருந்து தப்பிக்க முயன்ற போதும் அவர்களை மீண்டும் முட்டியது. அப்போது உதவிக்கு வந்த இளைஞனையும், அந்த மாடு முட்டி தாக்கியது. தொடர்ந்து அப்பகுதி மக்கள், கற்கள் மற்றும் கட்டையை கொண்டு மாட்டை விரட்டி அடித்தனர்.
Next Story
