WestBengal நீதிபதிகள் சிறைபிடிப்பு - ``நீதித்துறை அதிகாரத்துக்கே சவால்’’ .. சுப்ரீம்கோர்ட் காட்டம்

``நீதித்துறை அதிகாரத்துக்கே சவால்’’ .. சுப்ரீம்கோர்ட் காட்டம்

WestBengal நீதிபதிகள் சிறைபிடிப்பு - ``நீதித்துறை அதிகாரத்துக்கே சவால்’’ .. சுப்ரீம்கோர்ட் காட்டம் #westbengal #supremecourtofindia #thanthitv நீதிபதிகள் சிறைபிடிப்பு - முக்கிய நபர் கைது - என்.ஐ.ஏ விசாரணை மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த மாவட்ட நீதிபதிகளைச் சிறைபிடித்து, அவர்களது வாகனங்களைத் தாக்கிய விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியான மொஃபாகரூல் இஸ்லாம் என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். பாக்டோரா விமான நிலையத்தில் தப்பிச் செல்ல முயன்றபோது அவர் பிடிபட்டார். இந்தச் சம்பவத்தைத் தானாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, இது நீதித்துறை அதிகாரத்திற்கே விடுக்கப்பட்ட சவால் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில அரசு இதில் கடமை தவறியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை தேசியப் புலனாய்வு முகமை அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த வழக்கின் விசாரணையைத் தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com