நொடி பொழுதில் அடித்து மோதிய கார், பஸ், லாரி... சம்பவ இடத்திலேயே சிதறிய உடல்கள்

x

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலைத் தடுப்பு மற்றும் பேருந்து மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

மனகுளி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, முதலில் சாலைத் தடுப்பில் மோதியது. பின்னர், அவ்வழியாக சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதியது. இதனால் பேருந்தும் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும், பேருந்து ஓட்டுநரும் உயிரிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்