வெள்ளப்பெருக்கில் இழுத்துச் செல்லப்பட்ட குட்டி யானை
வயநாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இழுத்துச் செல்லப்பட்ட குட்டி யானையை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கேரள மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பணவள்ளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் குட்டி யானை ஒன்று இழுத்துச் செல்லப்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் குட்டி யானையை தேடி வருகின்றனர். ஆற்றை கடக்க முயன்ற குட்டி யானை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
Next Story
