Elephant | வீணான 3 நாள் போராட்டம் - அணைக்குள் குதித்து.. வேகமாக ஓடிவந்து துரத்திய சக்கக்கொம்பன்
வீணான 3 நாள் போராட்டம் - அணைக்குள் குதித்து.. வேகமாக ஓடிவந்து வனத்துறையினரை துரத்திய சக்கக்கொம்பன் #elephant #thanthitv கேரள மாநிலம் இடுக்கி சின்னக்கானலில் சக்கக்கொம்பன் காட்டு யானையைப் பிடித்து ரேடியோ காலர் பொருத்தும் வனத்துறையினரின் மூன்று நாள் முயற்சி தோல்வியில் முடிந்தது. யானைக்கு இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தியும் முழுமையாக மயங்காத நிலையில், அணைக்குள் குதித்து நீந்தி மறுகரைக்குச் சென்றது. இதையடுத்து யானையின் மயக்கத்தைப் போக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையில், மீண்டும் பலம் பெற்ற சக்கக்கொம்பன் வனத்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினரை விரட்டியது. இதனால் கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கும் முயற்சியும் கைவிடப்பட்டது. யானையின் உடலில் செலுத்தப்பட்ட மயக்க மருந்தின் அளவை மருத்துவர்கள் ஆய்வு செய்த பிறகு, டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் மீண்டும் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
