97வது ஆஸ்கர் - இந்திய குறும்படம் பரிந்துரை
97வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதி பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த குறும்படமான 'அனுஜா' இடம்பெற்றுள்ளது. ஆடம் ஜெ கிரேவ்ஸ் Adam J. Graves இயக்கியுள்ள இந்த குறும்படம், குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது. ஏற்கெனவே ஆஸ்கர் விருதை வென்ற The Elephant Whisperers ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் தான், இந்த குறும்படத்தையும் தயாரித்திருக்கிறார். இதேபோல், நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்த குறும்படத்தின் தயாரிப்புக் குழுவில் உள்ளார். எனவே இந்த குறும்படத்திற்கு, ஆஸ்கர் விருது கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Next Story
