கேரளாவில் பள்ளி சுற்றுலா பேருந்தும் அரசு பேருந்தும் மோதி கோர விபத்து - 9 மாணவ, மாணவிகள் உயிரிழப்பு

கோர விபத்தில் 41 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 4 பேர் கவலைக்கிடம்
x

கேரள மாநிலம் பாலக்காடு அருகே அரசு பேருந்து மீது பள்ளி சுற்றுலா பேருந்தும் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எர்ணாகுளத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் படிக்கும் 43 மேல்நிலை வகுப்பு மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

நள்ளிரவு 12 மணியளவில் பாலக்காடு வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பள்ளி சுற்றுலா பேருந்து, முன்னே சென்ற அரசு பேருந்தின் மீது அதிவேகமாக மோதியது.

இந்த விபத்தில் மாணவ, மாணவிகள் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியினர் படுகாயமடைந்த 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 4 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பள்ளி சுற்றுலா பேருந்து வேகமாக சென்றதால், கட்டுப்பாட்டை இழந்து அரசுப்பேருந்து மீது மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்