பேருந்தில் கடத்தப்பட்ட 80 கிலோ கஞ்சா பறிமுதல்...

ஆந்திர மாநிலத்தில், பேருந்தில் கடத்தப்பட்ட 80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்துள்ளனர்.
பேருந்தில் கடத்தப்பட்ட 80 கிலோ கஞ்சா பறிமுதல்...
Published on
ஆந்திர மாநிலத்தில், பேருந்தில் கடத்தப்பட்ட 80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து திருப்பதி செல்லும் அரசு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பிரகாசம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், குறிப்பிட்ட பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 9 பேரின் உடமைகளை சோதனை செய்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த 80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com