

மத்தியப்பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில், 8 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளியில் இருந்து, சிறுமி அழைத்து செல்லப்பட்ட காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அதனை வெளியிட்ட மண்ட்சோர் போலீசார், மர்ம நபரை தேடி வருகின்றனர்.