பலாத்காரம் செய்த நபரை வெட்டிக்கொன்று தீ வைத்து எரித்த 8 பெண்கள் - ஒடிசாவில் அதிர்ச்சி

x

ஒடிசாவில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை 8 பெண்கள் கூட்டாக சேர்ந்து வெட்டிக்கொன்று தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜபதி மாவட்டம் குய்குரி கிராமத்தை சேர்ந்தவர் 60 வயது முதியவர் கம்ப மாலிக். மனைவியை இழந்த இவரை, கடந்த 3ம் தேதியில் இருந்து காணவில்லை என்று அவரது குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டிய மலைப்பகுதியில், பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டனர். இதுதொடர்பாக 8 பெண்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். குய்குரி கிராமத்தில் கணவரை இழந்த 52 வயது பெண்ணை மாலிக் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், ஏற்கனவே மாலிக்கால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 7 பெண்கள் அவரை கொல்ல திட்டமிட்டு, வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தபோது சரமாரியாக வெட்டிக்கொன்று தீ வைத்து எரித்தது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்