ஒரே நேரத்தில் வந்த 7 விமானங்கள் - நிரம்பி வழிந்த ஏர்போர்ட்
டெல்லி புறநகர் பகுதியில் வீசிய புழுதிப் புயல் காரணமாக, விமான சேவை பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 50 உள்நாட்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. 25 விமானங்கள் வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்ட நிலையில், 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்ட விமானங்கள், ஒரே நேரத்தில் டெல்லியை வந்தடைந்ததால் விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும், உணவு, குடிநீர் கூட கிடைக்காமல் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் முதியவர்களும் அவதிப்பட்டதாக பயணி ஒருவர் சமூக ஊடகப் பக்கத்தில் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
Next Story
