பள்ளி மாடியில் இருந்து குதித்து 6ம் வகுப்பு மாணவி தற்கொலை

x

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், பள்ளி மாடியில் இருந்து குதித்து 6ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலமான பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு பயிலும் அமைரா என்ற மாணவி பள்ளியின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியர்கள் சிலர் திட்டியதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி இந்த முடிவை எடுத்ததாக சக மாணவிகள் சிலர் தெரிவித்துள்ளனர். போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வரும் முன்பே பள்ளி நிர்வாகம் ரத்தக்கறை உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்