நூதன முறையில் ரூ.5.10 கோடி மோசடி - மேலும் 4 பேர் கைது

x

புதுச்சேரியில், தனியார் நிறுவன உரிமையாளரை போன்று வாட்ஸ் அப்பில் பேசி, நூதன‌ முறையில் 5 கோடி ​ரூபாய் மோசடி செய்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவன கணக்காளராக பணியாற்றி வரும் சுகியா என்பவருக்கு, அவர் பணபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் புகைப்படத்துடன் கூடிய வாட்ஸ் அப் கால் வந்தது. அதில் உரிமையாளர் போல் பேசிய‌ நபர், தான் தொடங்க உள்ள புதிய திட்டத்திற்கு பணம் தேவைப்படுவதால், குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய சுகியா, பல தவணைகளாக 5 கோடியே 10 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். பின்னர் மோசடி நடந்துள்ளதை அறிந்து அளித்த புகாரின்பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுவரை 7 பேரை கைது செய்து, 2 கோடியே 48 லட்சம் ரூபாயை மீட்ட நிலையில், கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திராவை சேர்ந்த மேலும் 4 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்